தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட சமைத்த உணவு விஷமானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சமையல்காரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து நிறைவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களால் முதல்-அமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக கட்டணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக 1955 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.