மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது.
சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதுடன் தமது வாழ்விடங்களையும் மீளக்கட்டியெழுப்பி வருகின்றனர்.
அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா?
மக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். அபிவிருத்தி அடைந்த நாடுகள் மக்களிடம் வரியை அறவிடுவதோடு நிற்பதில்லை.
கதிர்காமம், நாகஹவீதிய யால வனப் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றிலும் கொங்கிரீட் கம்பம் ஒன்றிலும் நீண்ட காலமாக கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நாட்டில் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருக்கும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றார்.