உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் திரு உருவச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு விமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம் இம்மாத இறுதியிலிருந்து தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்தார்.
விசா காலம் முடிவடைந்தும் இலங்கையில் பணியாற்றி வந்தமையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவின், ஒரிஸா மானிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை விடுவிக்குமாறு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூகினியா நாட்டில் சிறையை உடைத்து 70-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். அப்போது சிறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.