கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சென்னை ஐஸ்-அவுசில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தரகர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலை காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மூன்றில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு அன்புமனி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியை வைத்து பயணிகளிடன் பீதியை ஏற்படுத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இதனால், சிறிது நேரத்திற்கு விமான நிலையம் மூடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு தற்கொலை தாக்குதலுக்கு சதி செய்ததாக 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று சிக்கினார். அவர் பெர்லின் அருகேயுள்ள உக்கர்மார்க் பிராந்தியத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை…
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு அன்பளிப்புச் செய்ய அக்கட்சி தீர்மானித்துள்ளது.