37 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை (06) நேற்றிரவு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களைக் கூட விசாரணைக்கு உட்படுத்தி வருவது இந்த அரசாங்கத்தின் கண்டிப்பான செயற்பாட்டை எடுத்துக் காட்டுவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்கு தப்பிவிடுவார் என்பதால் கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தாயக மக்களின் உரிமைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் செல்நெறிகளை நிராகரித்து, தமிழ் மக்களின் நீடித்த கௌரவமான பாதுகாப்பான அரசியல் செல்நெறிகளுக்கு வெளிப்படையாக புலம்பெயர்ந்த உறவுகளை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 4ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.