நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவால் நாட்டின் நிர்வாக அதிகாரத்தை கையாள இடமளிக்க முடியாது…
மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸிற்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் இன்று (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த ஆயிரக்கணக்கான அரச ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக, தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம் உடனடியாக ஃப்ரீசர் (Freezer) வசதிகளை வழங்குமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.