கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர்.
யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானிப்பாய் பகுதியில் வயோதிப பெண்ணை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி வீட்டின் உரிமையாளருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.