இலங்கை அரசாங்கம் அரச விடுமுறையை மேலும் மூன்று நாட்களிற்கு நீடித்துள்ளது. இன்று முதல் வியாழக்கிழமை வரை அரச விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குளிர் பழக்கமாக்கி கொண்டவனின் துயர் படி வாழ்வு நிர்கதியாக்கப்படுகிறது. மூச்சுக் காற்றில் பரவும் விஷ வைரஸின் பீதியில் உயிர் அச்சத்தில் தேசத்தால் துரத்தப்பட்ட அகதியானவனின் பரிதாபம். எவனொருவனின் அகதி அட்டையில்அடையாளப்படுத்தி வேதனம் தேடியவனின் பெரும் நகரம் ஆளவரமற்று தனித்துக் கிடக்கிறது. கை…
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும் வகையில், ஒரே பயணித்தின்போது தாங்கள் கொண்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை இரண்டாக குறைக்குமாறு சகல முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித, உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி வைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார் .
பரவிவரும் கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.