கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
தியாக தீபம் திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் புதன்கிழமை (செப்டெம்பர் 24) ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.
தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி திங்கட்கிழமை (செப்டெம்பர் 22) குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எமது நாட்டில் சிறுவயது முதல் ஒரு சில குழந்தைகளுக்கு பொய், வஞ்சனை போன்ற துற்குணங்களை கற்பிக்கும் பெற்றேர்களும் உள்ளனர். பாடசாலைக்கு சேர்க்கும் போதே போலியான விடயங்களை சொல்லிக் கொடுக்கின்றனர். இது மிகவும் கவலைக்குறுய விடயமாகும் என்று மல்வத்தை பீடத்தின் அணுநாயக்கத் தேரர் …
நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ…