திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாட்டின் தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்த சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை கண்டறியும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் தேர்தல் தொழில்நுட்பத் தேவை மதிப்பீட்டுப் பணிக்குழுவின் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று (9) உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 69 வயதுடைய முதியவரே உயிரிழந்தவர் ஆவார்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், சிறைக்கூண்டிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் செவ்வாய்க்கிழமை (07) பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை மாற்றம் இன்று வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது. 03 புதிய அமைச்சர்களும் 10 புதிய பிரதி அமைச்சர்களும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
நாட்டுக்கு வருகைத்தந்த பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகளிடமிருந்து உரிய கட்டணங்களுக்கும் அதிகமான பணத்தை பெற்ற குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகள் இருவர் பொலிஸ் சுற்றுலாப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.