விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு. ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் இந்த உத்தரவை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. என்ன நடந்தது? – ஐஸ்கிரீம் விளம்பரத்தில் பெண் ஒருவர் ஹிஜாபை…
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 4,500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சி ஆர்வலர்களான இவர்கள் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஆலம்கிர், நேற்று குஜராத் கடல் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை கோடு பகுதியை கடந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது. உடனடியாக இதை அறிந்த இந்திய கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமான…
தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 13 ஆயிரம் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் காற்று அதிகமாக வீசும்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து தமிழகத்தின் மின்தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.