கொத்துக்குண்டுகள் தொடர்பில் சிறீலங்கா விசனம்

4143 0

download-57ஐநாவின் 32ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கொத்துக்க குண்டுகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் விசனம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இறுதிக் கட்ட யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதற்கான புகைப்பட ஆதாரத்துடன் பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் தி கார்டியன் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அராசங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,இறுதிப்போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையெனவும், அவ்வாறு வீசப்பட்டிருந்தால் இதற்கு இராணுவம்தான் காரணம் என எவ்வாறு சந்தேகிப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன் இந்தப் படங்கள் நீண்டகாலமாக வந்துகொண்டிருக்கின்றன. இவை சிறீலங்காவில்தான் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கா?

மீட்கப்பட்ட கொத்துக்குண்டுகளில் எங்கேனும் சிறீலங்காவின் அடையாளங்கள் ஏதும் இருக்கா? அப்படி பயன்படுத்தியிருந்தால் இராணுவத்தினர்தான் பயன்படுத்தினார்கள் என எப்படிச் சொல்வது? விடுதலைப்புலிகளும் பயன்படுத்தியிருக்கலாம்தானே?மேலும் கண்ணிவெடிகள் அகற்றத் தொடங்கி 7 வருடங்கள் நிறைவடைகின்றது. இதுவரையும் இச்செய்தியை வெளியிடாது இப்போது ஏன் வெளியிடுகின்றனர். இதன்போது குறுக்கிட்ட ஊடகத்துறைப் பிரதியமைச்சர் கருணாசேன பரணவித்தாரண,

கண்ணிவெடி அகற்றும் நபர்கள் இது குறித்த புகைப்படங்களை வெளியிடுவது சட்டவிரோதமானது. ஜெனீவாவில் ஐ.நா. கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான தகவல்களை வெளியிடப்பட்டுள்ளதானது சர்வதேச மட்டத்தில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் எனவும் தெரிவித்தார்.

Leave a comment