ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு: விக்கிரமராஜா கண்டனம்

341 0

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 27 பொருட்களுக்கு வரி குறைப்பு என்று அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் மக்களை வெகுவாக பாதிக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அல்லது வரி குறைப்பு செய்திட அரசு இன்னும் முன்வரவில்லை. பெருவாரியான கோரிக்கைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

தற்போது அறிவித்துள்ள வரிகுறைப்பு வெறும் கண்துடைப்பு. வரிவிதிப்பில் தண்டனை சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளது.

வணிகர்களுக்கு எதிரான நடைமுறையில் உரிய மாற்றம் கொண்டுவராவிட்டால் தென்மண்டல கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்ட அறிவிப்பு இருக்கும். இதற்காக கோழிக் கோட்டில் 29-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment