தொண்டர் ஆசிரியர்கள்   மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ………….(காணொளி)

515 0

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்

யுத்த சூழலுக்கு மத்தியிலும் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய பலருக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் அவர்கள் தெரிவு செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்கின்ற பொய்யான ஒரு குற்றச்சாட்டை வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துவருவதாக, பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

676 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதும் வெறும் 182 பேரின் பெயர் விபரங்களே தற்போது வெளியாகியுள்ளதாகவும், அவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட ஆவணங்களை முழுமையாக கொண்டிருந்ததாகவும் ஏனையவர்களிடம் நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட ஆவணங்கள் முறையாக இல்லை என வடக்கு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வி அமைச்சு தங்களையும் இந்த நியமனத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment