ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள் மாற்றம்

624 0

மாத்தறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளது.

அலரி மாளிகையில் வைத்து நேற்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வெலிகமவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளராக தென்மாகாண சபை உறுப்பினர் கயான் சஞ்சீவ நியமிக்கப்பட்டுள்ளார்.

வெலிகம தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட தென்மாகாண சபை உறுப்பினர் ஷத்துர கலப்பத்தி, தெவிநுவர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கம்புருப்பிட்டிய தொகுதி இணை அமைப்பாளராக இருந்த தென்மாகாண சபை உறுப்பினர் ஷந்தன பியன்த, அங்கு புதிய அமைப்பாளரான பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

வெற்றிடமாக இருந்த ஹக்மன தொகுதி அமைப்பாளர் பதவிக்கு தென்மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment