சர்வதேச உள்ளீடுகள் இன்றி இடம்பெறும் போர்க் குற்ற விசாரணையால் எமக்கு எந்தவித நன் மையும் இல்லை- விக்னேஸ்வரன்

5396 0

CM-1சர்வதேச உள்ளீடுகள் இன்றி இடம்பெறும் போர்க் குற்ற விசாரணையால் எமக்கு எந்தவித நன் மையும் இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பிரதித் தலைவர் போலிடம் தெரிவித்தார்.

ஒரு நாள் பயணமாக யாழிற்கு வருகை தந்த போல் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அதன் நிறைவில் இச் சந்திப்புத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே வட மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சர்வதேச உள்ளீடுகள் இன்றி இடம்பெறும் போர்க் குற்ற விசாரணையால் எமக்கு எந்தவித நன்மையும் இல்லை என்பதனை தெரிவித்ததோடு இதனை கடந்த ஆண்டு ஐ.நா ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினேன்.

அத்துடன் உள்நாட்டு நீதிபதிகளையோ அல்லது உள்நாட்டு வழக்கு நடத்துநர்களோ இந்த வழக்கினை நடாத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்க மாட்டாது.

என்பதுடன் ஐ.நா எடுத்த தீர்மானத்திற்கு மாறாக இவர்கள் ஏன் கருத்துக் கூறுகின்றனர் என்பதனையும் சர்வதேசம் அறியவேண்டும். அதாவது குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் எண்ணத்துடனேயே இவ்வாறு கூறுகின்றனர்.

வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறுவதன் அர்த்தம் இந்த விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்படாது என்ற காரணத்திற்காகவே என்ற எனது காரணத்தையும் கூறினேன்.

இதேபோல் நீதித்துறையில் நான் பல ஆண்டுகள் இருந்தேன் அதன் பிரகாரம் நீதித்துறையில் இன ரீதியான எண்ணங்களும் செயல்பாடுகளும் இலங்கையில் நடந்தேறுகின்றன. என்பது பற்றியும் கூறியதோடு நல்லிணக்கத்திற்காக மத்தியுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம்.

பிழையானவற்றிற்கு அன்றி சரியானவற்றிற்கு ஒத்துழைப்போம். எனவும் கூறிய வேலையில் என்ன பிழையாக உள்ளது என்பதனையும் கேட்டறிந்தார்.

அது குறித்து பதிலளிக்கும்போது ,

சமஸ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தினை தெற்கில் கொண்டுள்ளவர்களிடம் சமஸ்டி என்பது சேர்த்து வைப்பதே என்பதனை அரசியல் வாதிகள் எடுத்துச் செல்லவில்லை.

இதை கூறவேண்டியது தெற்கு அரசியல்வாதிகளின் கடமை. இதனை செய்யவில்லை என்பதனையும் கருத்தில் எடுக்க வேண்டும். நல்லிணக்கத்திற்காக சமஸ்டியின் உண்மையான கருத்தை ஏற்படுத்த வேண்டும்.

இங்கே நல்லிணக்கத்திற்காக சமஸ்டி ரீதியான தீர்வை பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். சமஸ்டி என்ற சொல்லினை பாவிக்கத்தேவை இல்லை. மக்களிற்கு கொடுக்க வேண்டிய தீர்வினைக் குறிப்பிடலாம் . என்று பதிலளித்தேன் .

இவற்றினை தெற்கிற்கு எடுத்துச் செல்வதாக பதிலளித்தார் என்றார்.

Leave a comment