மரியா சூறாவளி – பேரழிவை உண்டாக்க சாத்தியமுள்ளது.

215 0

கரீபியன் தீவுகளை தாக்கியுள்ள மரியா சூறாவளி, பேரழிவை உண்டாக்க சாத்தியமுள்ள ஐந்தாம் தர புயலாக வலுப்பெற்றுள்ளதாக என்று அமெரிக்க வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரியா சூறாவளியின் வழித்தடத்தில் முதலாவதாக அமைந்துள்ள டொமினிகா தீவில் மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது.

குறித்த சூறாவலியில் தமது, வீட்டுக் கூரையும் தூக்கி எறியப்பட்டதாக டொமினிக்கா தீவுகளின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட், தமது முகப்புத்தக பதிவொன்றில் தகவல் வெளியிட்டுள்ளார்.

சூறாவளியின் தாக்கத்தால் தானும் கருணையை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளை இந்த சூறாவளி எதிர்வரும் சில மணிநேரங்களில் கடுமையாக தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த பகுதிகளை தாக்கிய ஏர்மா சூறாவளி பயணித்த அதே பாதையில் மரியா சூறாவளியும் பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து கரிபியன் தீவுக்கூட்டங்களில் உள்ள ஃப்ரென்ச் தீவுகள், கோடெலோப் போன்ற பகுதிகளுக்கும், போர்டோ ரிகோ, டொமினிகா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற தீவுகளுக்கும் அமெரிக்க, பிரிடிஸ் வேர்ஜின் தீவுகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய மரியா சூறாவளி எச்சரிக்கையை அடுத்து பிரிடிஸ் வேர்ஜினியா தீவுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளார்.

 

Leave a comment