இந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது மலேஷியா

10173 0

Sri-Laஅச்சே கடற்பகுதியில் நிர்க்கதிக்குள்ளான தமிழ் அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக மலேஷியாவின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இந்தோனேஷியாவின் உப ஜனாதிபதி ஜூசுப் காலாவுடன் தொடர்புகொண்டு பேசியதாக,பினாங் மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி நியூஸ்பெஸ்டுக்குக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அங்கு விஜயம் செய்வதற்கு முன்னர் இந்தோனேஷிய மத்திய அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என அச்சே ஆளுநர் குறிப்பிட்டதாகவும் ராமசாமி தெரிவித்தார்.இதேவேளை, இந்தோனேஷியாவிலுள்ள இலங்கைத் தமிழர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழகத்தின் திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.கும்பகோணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அச்சே கடற்கரையில் கரையொதுங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகை, பெக்கோ இயந்திரம் மூலம் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் இந்தோனேஷிய அதிகாரிகளின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 44 பேரும் பாதுகாப்புக்கு மத்தியில் அச்சே கடற்கரையில் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வேண்டுமென்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment