டிரம்ப் ஹார்வே புயல் நிவாரண நிதியாக 1 மில்லியன் டாலர் வழங்குகிறார்!

235 0

அமெரிக்காவில் ஹார்வே புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதியாக தனக்கு சொந்தமான ஒரு மில்லியன் டாலர் வழங்குகிறார்.

அமெரிக்காவின் தென் பகுதியில் மையம் கொண்டு இருந்த ஹார்வி புயல் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. இதனால் அங்குள்ள ஹூஸ்டன் நகரம், ஆஸ்டின் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அங்கு 3 நாளில் மட்டும் 125. செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகரின் 3-ல் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
அவர்களில் பலரை மீட்க முடியாத அளவுக்கு வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. 32 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், ஹார்வே புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதியாக தனக்கு சொந்தமான ஒரு மில்லியன் டாலரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்க இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் தெரிவித்தார்.

Leave a comment