காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு!

909 0

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாக காலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை  விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

 நேற்று புதன் கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும் எழைத் தொழிலாளியின்ன் கொட்டகையே தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இரவு எட்டு மணியளவில் அதேயிடத்தில் அமைந்துள்ள மற்றுமொரு காலணி தைக்கும் தொழிலாளியின்  கொட்டகை எரிக்கப்பட்ட போது வீதியால் சென்றவா்களால் தீ அணைப்பட்டுள்ளது.  இதன் பின்னரே கொட்டகை நள்ளிரவில் எரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல பொது மக்கள் தங்களிடம் வழங்கிய காலணிகள், குடைகள், பைகள் என்பன எரிந்துவிட்டது என்றும் அவா்கள் திருப்பி கேட்டால் தங்களால் எவ்வாறு அதனை பெற்றுக்கொடுப்பது என்று தெரியாதுள்ளது எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.
தாங்களும்  தங்களின் தொழிலும் என அமைதியாக குடும்ப வாழ்வாதாரத்திற்கான தொழிலை மேற்கொண்டு வரும் இவா்களின் கொட்டகையை எரிப்பது என்பது மிகமிக  மோசமான சமூக விரோத செயல் என பலரும் கவலை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment