டொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புட்டினை இரகசியமாக சந்தித்ததார்?

244 0

ஜேர்மனியில் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை இரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு இடையிலான அதிகாரப் பூர்வ சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு மேலதிகமாக இரகசியமான முறையில் மற்றுமொரு சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

அவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பில் ரஷ்யாவின் மொழிப்பெயர்ப்பாளர் ஒருவர் மாத்திரமே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும் கடந்த வருடம் அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலின் போது, ரஷ்ய ஜனாதிபதியின் உதவியுடனேயே டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் குழு ஒன்றும், எப்.பி.ஐயும் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment