வித்யா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய காவற்துறை அதிகாரி ஒருவர் கைது

6484 30

புங்குடுதீவு மாணவி வித்யா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தப்பித்து செல்வதற்கு, உதவி வழங்கியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேற்கொள்ளபட்டு வந்த விசாரணைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment