136 ஆவது நாளாக இராணுவ முகாம் முன்பாக சொந்த நிலத்துக்கு காத்திருக்கும் கேப்பாபுலவு மக்கள்

148 0

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 136  ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் எண்ணத்தோடு மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த  தொடர் போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை  தாம் முன்னெடுக்கப்போவதாக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக போராடிவரும் மக்கள் தமக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது காணிகளில் இராணுவம் வருமானமீட்டிவருவதாகவும் குற்றம்சுமத்துவதோடு தமது காணிகளில் தம்மை விரைவில் குடியமர்த்த அனைவரும் முன்வருமாறும் கோரியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.