ஸ்பெயின் சென்றடைந்தார் பிரதமர் மோடி

248 0

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் குறித்து அந்நாட்டு பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பயணத்தின் முதற்கட்டமாக நேற்று ஜெர்மனி சென்ற மோடிக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தார். பின்னர் இந்தியா – ஜெர்மனி இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, ஜெர்மனி பயணத்தை முடித்த பிரதமர் மோடி, டெகல் விமான நிலையத்தில் இருந்து நேராக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேட்ரிட் நகரில் அவர் தங்கவிருந்த விடுதிக்கு வெளியே குழுமியிருந்த மக்களை மோடி சந்தித்து பேசினார். இதில் இந்திய – ஸ்பெயின் இடையே வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. சுமார் 29 வருடங்களுக்கு பிறகு ஸ்பெயின் செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.