ரஷ்யாவுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கடத்தல்: ஜேர்மனியில் 5 பேர் கைது

12 0

ரஷ்யாவுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கடத்தியதாக ஜேர்மனியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

16,000 முறை பொருட்கள் கடத்தல்

ரஷ்ய பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்காக கடத்தலில் ஈடுபடும் அமைப்பொன்று குறித்து தகவலறிந்த ஜேர்மன் பொலிசார் பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்தினார்கள். ரெய்டுகளின்போது அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள், மேலும் ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டார்கள்.விசாரணையில், ஜேர்மனியிலுள்ள சில நிறுவனங்களை பயன்படுத்தி, 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் ரஷ்ய பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்கு கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவ்வகையில், சுமார் 16,000 முறை அந்த அமைப்பினர் ரஷ்யாவுக்கு பொருட்களைக் கடத்தியுள்ளார்கள்.