போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்த ஜேர்மனி

13 0

ஜேர்மனியில் போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் நாடே ஸ்தம்பித்துள்ளது.

போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

நேற்று திங்கட்கிழமை, ஜேர்மனியில் பெரும்பாலான பேருந்து, ட்ராம் மற்றும் சுரங்க ரயில் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்த ஜேர்மனி | Nationwide Strikes Hit Public Transport In Germany

திங்கட்கிழமையும் அதுவுமாக போக்குவரத்து கடுமையாக பாதித்ததால் மக்கள் அலுவலகங்களுக்கும் பிள்ளைகள் பள்ளிக்கும் செல்ல மாற்று போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய நேரிட்டது. தொழிலாளர் யூனியனான Verdi, பணியாளர்களுக்கு நல்ல வேலைச்சூழல், குறைவான நாட்கள் வேலை, நீண்ட ஓய்வு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதே ஜேர்மனி ஸ்தம்பிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.