யாழில் திடீரென வயிற்றோட்டம் ஏற்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

16 0

யாழில் கிருமித் தொற்றினால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(1.2.2026) இடம்பெற்றது.

கோண்டாவில் – இருபாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு நேற்றையதினம் வயிற்றோட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

வயிற்றோட்டம் ஏற்பட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்து கிருமித்தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.