மூன்று வாகனங்கள் மோதி விபத்து ; மூவர் காயம்!

13 0

கொழும்பு – கண்டி வீதியில் பட்டலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காரின் சாரதி காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அத்தனகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.