வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பத்திரன தெரிவு

7 0

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பத்திரன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை (2) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவாகியுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான லசந்த விக்ரமசேகர தெரிவாகியிருந்தார்.

லசந்த விக்ரமசேகர, கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்டிருந்த வெற்றிடத்துக்கு, புதிய தவிசாளரை தெரிவு செய்துகொள்வதற்கான வாக்கெடுப்பு இன்று பிரதேச சபையில் நடைபெற்றது.

அதன் பிரகாரம், தவிசாளர் பதவிக்கு கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான சிந்தக்க ஹேவா பத்திரணவும் தேசிய மக்கள் சக்தி சார்பில் ரசிக்க பிரியன்கரவும் போட்டியிட்டனர்.

சபை இன்று காலை கூடியபோது, கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான கூட்ட நடப்பெண் இல்லாமை காரணமாக சபை நடவடிக்கை 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அதன்போது சுகயீனமுற்றிருந்த கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகை தர முடியாமல் இருந்த நிலையில், அவரை சபைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பின்னர், சபை நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, தவிசாளரை தெரிவு செய்துகொள்வதற்கான வாக்கெடுப்பை பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியை முன்னணியாகக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சி பிரேரணை ஒன்றை முன்வைத்தது.

என்றாலும் தேசிய மக்கள் சக்தி ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரியபோது, அது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்புக்கு அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அதன் பிரகாரம் தவிசாளரை தெரிவு செய்துகொள்வதற்கான வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், இ்டம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரசிக்க பிரியன்கரவுக்கு 22 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன் கூட்டு எதிர்க்கட்சி சார்ப்பில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சிந்தக்க ஹேவா பத்திரணவுக்கு 21 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் ரசிக்க பிரியன்கர தெரிவாகினார்.

இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக்கொண்டது.