சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமீந்திர ராஜபக்ஷவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

9 0

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமீந்திர ராஜபக்ஷவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (2) உத்தரவிட்டுள்ளது.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமீந்திர ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.