தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பகுதிகளில், நடந்த இரண்டு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவினரால் நேற்று சனிக்கிழமை (31) குறித்த சந்தேகநபர்கள் தெஹிவளை – தும்ரிபோல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 09ஆம் திகதி தெஹிவளை பகுதியிலுளடள ஹோட்டலின் உரிமையாளரை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் கடந்த டிசம்பர் 12ஆம் திகதி கொஹுவலை – போதியவத்த பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை என்பவற்றிற்கு உடந்தையாக இருந்து உதவி இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 14 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் 18 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் கல்கிஸ்ஸை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த இரண்டு சந்தேகநபர்களும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரால் தூண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

