குருணாகலில் பொல்கஹவெல பிரதேசத்தில் மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் பொல்கஹவெல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொல்கஹவெல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடிதரமுல்ல மற்றும் பனலிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 24 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 2,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போதை மாத்திரைகள் அடங்கிய 10 பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் மருந்தகம் நடத்தும் போர்வையில் நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

