கற்றல் உதவி வழங்கல் – யேர்மனி வாழ் தமிழ்மக்கள்.25.01.2026

26 0

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசத்திற்குட்பட்ட பாலம்பிட்டி மற்றும் தட்ச்சனாமருதமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த மாதங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாடசாலை உபகரணங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வறுமைக்குட் பட்ட 100 மாணவர்களுக்கு யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 25.01.2026 அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இதில் புத்தகப்பை, கொப்பி, கணிதஉபகரணப்பெட்டி,பென்சில், பேனா, அழிறப்பர், என்பன வழங்கிவைக்கப்பட்டது.  இவற்றை வழங்கிவைத்த யேர்மனி வாழ் தமிழ் மக்களுக்கு பாலம்பிட்டி மற்றும் தட்சனார்மருதமடு கிராம மாணவர்களும் பெற்றோர்களும் தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.