மாலைதீவு குடியரசின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தாரிக் இப்ராஹிமை மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எம். ரிஸ்வி ஹஸன் நட்பு ரீதியாக சந்தித்து உரையாடியதுடன் நினைவுச் சின்னமும் வழங்கினார்.
இதன்போது, காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பொதுவான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளவும், நிலைத்த சுற்றுலா வளர்ச்சியை முன்னெடுக்கவும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அத்தோடு இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவான இருதரப்பு உறவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.
இச்சந்திப்பில் தூதரக ஆலோசகர் திருமதி திமுத்து திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.

