கண்டி – ஹாரகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.
பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது, பஸ்ஸில் 20 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் படுகாயமடைந்த இருவர் கண்டி வைத்தியசாலையிலும் மற்றும் 5 பேர் தலாத்துஓயா வைத்தியசலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பாக தலாத்துஓயாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரியும் அந்தப் பகுதியில் இயங்கி வரும் கோழித்தீன் தொழிற்சாலையின் துர்நாற்றம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவித்து மஜ்மா நகர் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடாத்திய மக்களிடம், பிரதேசசபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

