முன்னாள் அமைச்சர் அஜித் பீ பெரேராவின் தலைமையில் களுத்துறை நகரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையில் இளைஞன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் புதன்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாநகர சபையின் உறுப்பினரான ஜயநாத் நவரத்ன என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போராட்டம் நடைபெற்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவனே தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதலுக்
காயமடைந்த இளைஞன் களுத்துறை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

