புத்தளத்தில் சிலாபம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (28) காலை சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கரவிடாகரய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 70 கிராம் 180 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

