2026ஆம் ஆண்டுக்கான தரம் 1 பாடசாலை மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (29) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், முதலாம் தரத்திற்கான பாடத்திட்டத்தை இந்த வருடம் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் பாடசாலை மாணவர்களை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கான தேசிய விழா இன்று காலை அதுருகிரியவிலுள்ள குணசேகர கல்லூரியில், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
அதேநேரம், பணக்கார நாட்டில் வளமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
எந்தவொரு சிறுவர்களின் கல்வியும் பெற்றோரின் நிதியால் தீர்மானிக்கப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டும் பிரதமர், எந்தவொரு சிறுவர்களும் கல்வியிலிருந்து விடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஆறாம் வகுப்புக்கான புதிய கல்வி சீர்திருத்தங்களை அமுல்படுத்தலானது, அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டாலும், எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்படாது என காலியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

