முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (28) ஆஜராகியுள்ளார்.
விசாரணை ஒன்று தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்வதற்காக செவ்வாய்க்கிழமை (27) அவரது வீட்டிற்கு சென்றிருந்த போது, சமன் ஏக்கநாயக்க வீட்டில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.இந்த நிலையில் சமன் ஏக்கநாயக்க இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

