இந்தியாவின் கா்நாடகா மாநிலத்தின் முதல்வா் சித்தராமையா மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் பராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இந்தியாவின் பெங்களூரில் உள்ள கா்நாடகா முதல்வா் சித்தராமையாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து முதல்வர் சித்தராமையா, நாமல் ராஜபக்ஷவுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது குறித்தும் இந்த சந்திப்பின் போதுகலந்துரையாடப்பட்டது.

