கொழும்பிலுள்ள ஆண்கள் பாடசாலையொன்று தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ அக்கல்லூரியின் அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகள் குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிபரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் கூறினார்.
அறிக்கை கிடைக்கும் வரை, இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

