மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமரின் தொழில் மற்றும் உற்பத்தித்துறையின் விசேட உதவியாளர் ஹாரூன் அக்தர் கான், இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவர், பாகிஸ்தான் – இலங்கை கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் 18ஆவது அமர்வில் பங்கேற்க உள்ளார்.இந்த அமர்வை வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்புப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
ஐந்து சிரேஷ்ட பாகிஸ்தான் அதிகாரிகள் கொண்ட குழுவும் ஹாரூன் அக்தர் கானுடன் வருகை தந்துள்ளது.

