பதுளை, வெலிமடை, அம்பகஸ்தொவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அம்பகஸ்தொவ பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (26) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பதுளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.
சந்தேக நபரான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து 04 கிராம் 2 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 26 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரின் விசாரணையில், சந்தேக நபரான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் மேலும் நான்கு பெண்களும் ஒரு ஆணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தொவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

