ரயில் பெட்டியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம்காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

10 0

மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவ ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடைக்கு முன்னால், இலக்கம் 04 இல் பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியில் இருந்து கடந்த 12ஆம் திகதி மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை  பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த நபர், சுமார் 60 வயதுடைய, 5 அடி 4 அங்குல உயரமுள்ளவர் எனவும், நெற்றியில் தழும்புகளுடன், நீலநிற சட்டை மற்றும் பச்சை மற்றும் பழுப்பு நிற சாரம் அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கங்கள்

பொலிஸ் அத்தியட்சகர், மஹவ – 071-8591282                          

மஹவ பொலிஸ் நிலையம் – 037-2275222