குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
கொலை மிரட்டல் சம்பவம் ஒன்று குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர் ருக்ஷான் பெல்லன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியிலிருந்து பணிநீக்கம் செய்ய அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6யாழ். மாநகர சபைக்கும், டொரன்டோ மாநகரத்துக்கும் இடையிலான நட்புணர்வு ஒப்பந்தத்தை மீள வலுப்படுத்த கோரிக்கை

