விபத்தில் சிக்கி பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு!

8 0

களுத்துறையில் மொரந்துடுவ பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எகொட உயன பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.