அகரம்-2025 “பல்சுவை கலைமாலை”நிகழ்வின் மூலம் அனிஞ்சியன்குளம், துணுக்காய் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

22 0

26/01/2026. முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்திற்குட்பட்ட அனிஞ்சியன்குளம், மற்றும் துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட அமைதிபுரம், ஆரோக்கியபுரம்ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களில் கடந்த மாதங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து வீட்டு தளபாடங்கள் பாடசாலை உபகரணங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வறுமைக்குட் பட்ட 50 மாணவர்களுக்கு ஜேர்மன் மத்திய மாநிலம்-2ல் வாழும் தாயக உறவுகளின் பேராதரவில் அகரம்-2025 “பல்சுவை கலைமாலை”நிகழ்வின் மூலம் பாதிப்புற்ற தாயக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் கீழ்
கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதில் பொத்தகப்பை,கொப்பி,கணிதஉபகரணப்பெட்டி,பென்சில், பேனா, அழிரப்பர், என்பன வழங்கிவைக்கப்பட்டது. இவற்றை வழங்கிவைத்த ஜேர்மன் மத்திய மாநிலம்-2ல் வாழும் தமிழ்மக்களுக்கு மல்லாவி மற்றும் துணுக்காய் பிரதேச மாணவர்களும் பெற்றோர்களும் முழுமனதுடன் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.