அமெரிக்காவின் பல மாநிலங்களில் வீசி வரும் கடும் பனிப்புயல், உறைபனி மற்றும் குளிர் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வானிலை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பனிப்புயல் தொடர்பான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழப்பிற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிய அதிகாரிகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் பனி படிவங்கள் காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 800,000 இற்கும் அதிகமானோர் இருளில் மூழ்கியுள்ளனர். (

