அம்பலாங்கொடை – எல்பிட்டிய வீதியில் கரந்தெனிய பனில்கந்த பகுதியில் திங்கட்கிழமை (26) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான கரந்தெனிய, நாமினிகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய விகும் தனஞ்சய பண்டார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டியவிலிருந்து – அம்பலாங்கொட நோக்கிச் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதிய நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

