தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 140ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று திஹகொட பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.
திஹகொட போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சொகுசு கார் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சொகுசு காரினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பயணச்சீட்டு ஒன்றின் ஊடாக இந்த கார் தொடங்கொடையிலிருந்து மத்தல பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சொகுசு காரில் இருந்த இலக்கத்தகடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த கார் இரத்தினபுரியில் உள்ள நபரொருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் திஹகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

